Saturday, May 9, 2020

2.கோ வின் நீலவண்ண ரோஜா - சிறுகதை

பகுதி 2 (((( பகுதி ஒன்றை படுபடிக்கவும்)))))




கருமையான வளர்ந்த மிக நீண்ட கூந்தல்.  அதிலே ஓர் நீல வண்ண ரோஜா. இதை அவளுக்கு தந்தவர் இன் மாநிலத்தின்  முதல்வர். 'ஆடல் கலை தெய்வம் தந்தது' என்பது உண்மையாகவே இருக்க வேண்டும்.  ஏனெனில் ஆடக் கற்கும் அனைவருமே எதிர்பார்க்கிறப்படி ஆடுவதில்லை.  கோ வின் ஆட்டத்திற்கு சிறந்த பரிசாக நீலவண்ண ரோஜா, அதுவும் முதல்வரின் கையால் உச்சி முகர்ந்து, பெரிய மேடையில் வாங்குவது என்பது சாதாரண  காரியம் இல்லை. நீலவண்ண ரோஜாவிடம் அரம்பித்த கதை இன்று வரை தன் அனைத்து சொத்துக்களுக்கு முதல்வரின் கைங்கரியம் தான். முடிச்சூடா மன்னராக இருந்த முதல்வர் தன் பினாமி சொத்துக்களுக்கு அவளைத்தான் நியமித்தார். அவரின் போகாத காலம் குண்டு அடிப்பட்டு இறந்து போனார். இதுவும் கோ வுக்கு சாதகமாகி விட்டது. அவருக்கு பின் கட்சி, ஆட்சி என எல்லாவற்றிலும் தலைவியானாள். இன் மாநிலத்தின் முதல்வராகவும் ஆனாள்.

தன் வந்த வழி தவறாக இருக்கலாம். அதற்காக மக்களுக்கு நல்லதே செய்வில்லை என்று கூறிவிட முடியாது. மக்களுக்கு நல்லதும் செய்திருக்கிறார். தன்னால் முடிந்த வரை மக்களுக்காகவே வாழ்ந்தார் என்பது சிறு உண்மை இருக்கிறது என்றாலும், தன்னை சுற்றி இருப்பவர்களுக்காக வாழ்ந்தார் என்பதே உண்மை. இன்று தன்னை சுற்றி இருந்தவர்கள்  துரோகியாக நீதிமன்றத்தில் இத்துகைய தீர்ப்பு.................

கோ வின் பார்வை முழுவதும் அங்கே சிதறிக்கிடந்த உப்பு கலந்த எலுமிச்சை மீது படர்ந்தது. அதை எடுத்த மறுகணமே மிகச்சிரியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவள் வாழ்க்கை போலவே இருள் சூழ்ந்து இருந்தது. கையில் எடுத்த உப்பு எலுமிச்சையை தன் செவ்விதழில் குவித்து, உறிஞ்சி, தன்னிலை மீண்டாள். போதை பேரின்பத்தில், கபலத்தின் நரம்புகள் புடைக்க, மூளை எரிமலை வெடிப்புக்கு பின் அமைதி பெறுவதை போல அமைதியானது. பல முனிவர்கள் தங்களை சிவனுடன் இணைக்க கஞ்சாவை புகைப்பது போல சிலர் தங்கள் துக்கங்களை குறைக்க மதுவை நாடுகின்றனார். ஆனால் அது உண்மையல்ல. போதை நினைவை இழக்க செய்து விடும். அதாவது, ஏதும் செய்ய முடியாத கோழையாக மாற்றிவிடும். 

சின்ன நீல வண்ண மெழுகுவர்த்தியை ஏற்றி, அதை அந்த கண்ணாடி மேசை மீது வைத்தாள் வேலைக்காரி. அறையில் சிறு ஒளி படர்வதை கண்ட கோ வேலைக்காரியை பார்த்தாள். மருண்ட மண்டை கோலமாக வேலைக்காரி ஓடுவதற்கு தயாரானாள். கோ தன் கையை தூக்கி ஒருமுலம்  கட்டுவது போல மது பாட்டிலை எடுத்து வர சொன்னாள். உடைத்த அதே மாதிரியான நீலவண்ண மது பாட்டில் மேசை மீது வைத்தாள். கண்ணாடியின் ஒரு சில் வேலைக்காரியின் பாதத்தை பதம் பார்த்தது. அதை வெளியே காட்டாமல் ஒடி சென்றாள். இரத்தத்தின் வாசனை அந்த அறை முழுவதும் நிரம்பியது. தலைக்கு ஏறிய போதையிலும் இரத்த வாசனை எட்டியது. 
தொடரும்

No comments:

Post a Comment

You are welcome my dear one